கம்பத்தில்மோட்டார்சைக்கிள் திருட்டு
கம்பத்தில் கடை முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள் திருட்டுபோனது.
கம்பம் போர்டு பள்ளி தெருவை சேர்ந்தவர் யயாதி (வயது 23). செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 26-ந்தேதி இவர், கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பெட்டிக்கடை முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு வேலைக்கு சென்றார். பின்னர் இரவு அவர் வேலை முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அவர் பல்வேறு இடங்களில் தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதனால் அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.