கம்பத்தில்வனத்துறை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி

கம்பத்தில் வனத்துறை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-12-29 18:45 GMT

தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட வன ஊழியர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் தீ தடுப்பு குறித்து பயிற்சி கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி அலுவலர் குமரேசன் முன்னிலை வகித்து வன ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சி வழங்கினார். இதில் நீர்நிலைகள், அடர்ந்த காடுகளில் ஏற்படும் தீ விபத்து, பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறையினரால் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து விளக்கி காட்டினார்.

மேலும் வனப்பகுதியில் விபத்தில் சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது என தத்ரூபமாக செய்து காட்டினார். நிகழ்ச்சியில் கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜலட்சுமி, ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் கம்பம், சின்னமனூர், வருசநாடு, கூடலூரை சேர்ந்த வனச்சரகர்கள், தீ தடுப்பு காவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்