கம்பத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை

கம்பத்தில் தனியார் பைபர் இணையதள சேவை வினியோகஸ்தர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-12 16:48 GMT

கம்பத்தில் தனியார் பைபர் இணையதள சேவை கடந்த 3 மாதங்களாக அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்று பகல் 12 மணிக்கு துண்டிக்கப்பட்ட இணையதள சேவை இன்று காலை 10 மணி வரை இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த பைபர் இணையதள சேவை மூலம் இயங்க கூடிய ஏ.டி.எம். செயல்படவில்லை. இதேபோல் வணிக நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அந்த பைபர் இணையதள சேவை வினியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கம்பம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் இணையதள சேவையை தடையின்றி வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொலைதொடர்பு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனால் பைபர் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் இணையதள சேவை முடக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் தடையின்றி இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்