கம்பத்தில்புத்தக தான நிகழ்ச்சி
கம்பத்தில் சிறை கைதிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்ட சிறை, மதுரை மத்திய சிறை கைதிகள் அங்கு உள்ள நூலகத்தில் அறிவுப்பூர்வமான புத்தகங்களை படித்து பொது அறிவை வளர்த்திடவும், தங்கள் வாழ்க்கை பயணத்தை நன்மையான வழியில் செயல்படுத்தும் வகையில், தமிழக சிறைத்துறை தலைவர் அமரேஷ்பூசாரி ஆலோசனை பேரில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பின் கீழ் சிறைத்துறையினர் புத்தக தானம் பெற்று சேகரித்து வருகின்றனர்.
அதன்படி, உத்தமபாளையம் கிளை சிறைத்துறை சார்பில், கம்பம் போக்குவரத்து சிக்னலில் புத்தக தான நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற புத்தகங்களை சிறைக்கு தானமாக வழங்கினர். இதேபோல் கம்பம் நகராட்சி சார்பில், நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி உறுப்பினர்கள் உத்தமபாளையம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் வேலுமணியிடம் புத்தகங்களை வழங்கினர்.