கம்பத்தில் மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: தொழிலாளி கைது
கம்பத்தில் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் சுப்பிரமணிய கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அர்ச்சனா (26). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 29-ந்தேதி இரவு குடும்ப பிரச்சினை காரணமாக ரஞ்சித்குமார் தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அா்ச்சனாவை வெட்ட முயன்றார். இதில் அலறி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அவர்களை விலக்கி விட்டனர். பின்னர் ஆத்திரம் அடங்காத ரஞ்சித்குமார் வீட்டு ஜன்னல், கதவை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றார். இதுகுறித்து அர்ச்சனா கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தார்.