கம்பத்தில்பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
கம்பத்தில் பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கம்பம் கணபதி அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் குணவதி (வயது 65). இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் முருகன் என்பவர் இரவு நேரத்தில் சங்கு ஊதுதல், பில்லி சூனியம் செய்தல், நிர்வாணமாக நடப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் குடியிருக்க முடியவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக கடந்த 22-ந்தேதி குணவதி வீட்டிற்குள் முருகன் புகுந்து அவரை அவதூறாக பேசியதுடன், தன் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குணவதி கம்பம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.