பெருந்துறை-ஈரோடு ரோட்டில் செட்டிதோப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்
குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீர்;
பெருந்துறையில் இருந்து இரு சக்கர வாகனங்களில் ஈரோட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் 4 வழிசாலையான பெருந்துறை-ஈரோடு ரோட்டில் சென்று வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஈரோடு கோர்ட்டு, ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகள், வியாபாரம்-வேலை தொடர்பாக, கல்லூரிகளுக்கு என ஏராளமானோர் இந்த ரோடு வழியாக சென்று வருகின்றனர். பெருந்துறை-ஈரோடு ரோட்டில் உள்ள செட்டிதோப்பு வளைவு பகுதி மிகவும் தாழ்வானதாகும். இந்த பகுதியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி ஏதுமில்லை. மேலும் இந்த தாழ்வான ரோட்டுப் பகுதியைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் அனைத்தும் மேடாக உள்ளது. இதனால் மழை நின்று ஒரு வாரம் ஆன பிறகும் வடிகால் வசதி ஏதுமில்லாததால் மழை நீர் ரோட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் செட்டிதோப்பு பகுதியிலேயே குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த ரோட்டில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீர் செல்ல வடிகால் வசதி அமைத்து வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் சென்று வர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---