வைகாசி விசாகத்தையொட்டிபாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி நேற்று, பெரியகுளம் தென்கரையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-06-02 18:45 GMT

வைகாசி விசாகத்தையொட்டி நேற்று, பெரியகுளம் தென்கரையில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவருக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையடுத்து உற்சவர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்