வைகாசி விசாகத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update:2023-05-30 11:05 IST

சென்னை,

வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலா காட்சி நடைபெற்றது.

விழாவின் பிரதான நாளான இன்று (மே 30) தேர் திருவிழா நடைபெற்றது. வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்