புரட்டாசி மாதத்தையொட்டி ஈரோட்டில் மீன்கள் விலை குறைந்தது

புரட்டாசி மாதத்தையொட்டி ஈரோட்டில் மீன்கள் விலை குறைந்தது.

Update: 2023-09-24 21:00 GMT

புரட்டாசி மாதத்தையொட்டி ஈரோட்டில் மீன்களின் விலை குறைந்தது.

விற்பனை மந்தம்

புரட்டாசி மாதம் விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம்.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அலைமோதிய இறைச்சி கடைகளில் நேற்று வழக்கத்தைவிட விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. இதனால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் பிராய்லர் கோழி இறைச்சியின் விலையும் சற்று குறைந்து உள்ளது. கடந்த வாரம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இறைச்சி நேற்று ரூ.180-க்கு விற்பனையானது.

மட்டன் ஒரு கிலோ ரூ.700-க்கும், நாட்டுக்கோழி ரூ.600-க்கும் விற்பனையானது.

இதேபோல் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன்மார்க்கெட்டில் நேற்று கடல் மீன்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அங்கும் மீன்களின் விற்பனை மந்தமாக இருந்தது.

வஞ்சிரம்

ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.700 ஆக விலை குறைந்தது. ரூ.250-க்கு விற்கப்பட்ட அயிலை மீன் ரூ.200-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை மீன் ரூ.450-க்கும், ரூ.900-க்கு விற்கப்பட்ட வெள்ளை வாவல் ரூ.450-க்கும், ரூ.700-க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் ரூ.500-க்கும், ரூ.700-க்கு விற்கப்பட்ட கடல் இறால் ரூ.600-க்கும் விற்பனையானது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

சங்கரா - ரூ.300, சீலா - ரூ.450, மத்தி மீன் - ரூ.150, கொடுவா - ரூ.400, முரல் - ரூ.250, பாறை - ரூ.400, திருக்கை - ரூ.300, நகர மீன் - ரூ.400. இதேபோல் ஒரு கிலோ நண்டு ரூ.300-க்கு விற்பனையானது.

ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மார்க்கெட்டிலும் மீன் விற்பனை மந்தமாக இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்