கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டுதெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

Update: 2023-08-08 00:38 GMT

திருமங்கலம், 

திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அமைதிப் பேரணி நடைபெற்றது. திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து மறவன் குளம் பகுதி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கருப்பு நிற ஆடை அணிந்து அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆலங்குளம் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, தனபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகர்மன்ற குழு தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்