கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 175 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாாி தகவல்

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.

Update: 2022-12-03 18:45 GMT

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் 7-ந் தேதி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி டவுன்ஷிப், காட்டுமன்னார்கோவில், கும்பகோணம், திருக்கோவிலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை, தாம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் கடலூர் மண்டல போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கடலூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்