சுதந்திர தின விழாவை முன்னிட்டுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து நடந்தது.

Update: 2023-08-15 18:45 GMT

திருச்செந்தூர்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வசந்த மண்டபத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கு, இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், கோவில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், செந்தில்வேல்முருகன், சீதாலெட்சுமி, முத்துமாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி பொது விருந்தினை தொடங்கி வைத்து, பக்தர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவியாக வேஷ்டி, சேலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம்

திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி வஷித்குமார், உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாமணன், மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் முத்துராமன் ஆகியோர் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நகராட்சி துணை தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலருமான செங்குழி ரமேஷ் தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் வாள் சுடலை, ஒன்றிய அவைத்தலைவர் குழந்தைவேலு, மாவட்ட துணை அமைப்பாளர் கிருபாகரன், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி உறுப்பினர் கேடிசி முருகன், கோமதிநாயகம், ராஜமோகன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி அலுவலகம்

திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் சிவஆனந்தி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கண்மணி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிகள்

செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கங்காகௌரி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தாளாளர் ராமச்சந்திரன் தலைமையில் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சிவகுகன் தேசிய கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

காங்கிரஸ்

திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காந்தி காமராஜ் சிலைகளுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரனும், நாராயணன் பிள்ளை கொடி கம்பத்தில் தியாகிகள் வாரிசு ஆண்டியும், 8-வது வார்டு மகாராஜன் நினைவு கொடிக்கம்பதில் ஆனந்தராயனும் கொடியேற்றினர். நிகழ்ச்சியில் நகர தலைவர் முருகேந்திரன், விவசாய பிரிவு பொருளாளர் கார்க்கி, நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி செண்பகராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்