விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

Update: 2022-08-30 03:01 GMT

சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், முல்லை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் குறைவாக பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்