பவுர்ணமியையொட்டிகைலாசநாதர் கோவிலில் கிரிவலம் வந்த பக்தர்கள்

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Update: 2023-02-05 18:45 GMT

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் மலை மேல் கைலாசநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெறும். அதன்படி, நேற்று தை மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பவுர்ணமி கிரிவலத்தில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்