சதுா்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

சதுா்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

Update: 2023-09-10 17:58 GMT

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீடு மற்றும் பொது இடங்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டு கரூர் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

விற்பனை மும்முரம்

அதன்படி கரூர் திருமாநிலையூர், சுங்ககேட் செல்லும் பகுதி, பைபாஸ் சாலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மயில், எலி, பசுமாடு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் மீது விநாயகர் அமர்ந்து இருப்பது போன்ற சிலைகள் அரை அடி முதல் 6 அடி என பல்வேறு அடிகளில் தயார் ெசய்யப்பட்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

இந்த சிலைகள் ரூ.50 முதல் ரூ.500, ரூ.1000, ரூ.2000 என பல விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை மும்முராக நடக்கிறது.

அதிக அளவில் விற்பனை

இதுகுறித்து விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வரும் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கரூர் பகுதியில் இங்கேயே தங்கி இருந்து விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தேடி பிடித்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்