ஆஷாட ஏகாதசியையொட்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை

ஆஷாட ஏகாதசியையொட்டி பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கூட்டு பிரார்த்தனை நடந்தது

Update: 2022-07-11 12:16 GMT

பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஸ்ரீ மாதுரி சமேத வரத சுவாமிக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சனம்நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆஷாட ஏகாதசியையொட்டி திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் மற்றும் கூட்டு பிராத்தனை நடந்தது. இதில் சுவாமிக்கு துளசியால் அலங்காரம் செய்யப்பட்டது. பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே ராம ஹரே கிருஷ்ண என்ற மந்திரம் முழங்க தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்