அப்துல் கலாம் நினைவு தினம்: பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் - கமல்ஹாசன்

வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர் டாக்டர் அப்துல் கலாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-27 10:17 GMT

சென்னை,

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு என்ற  இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இன்று 7ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி  ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். அதில், 

வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் என அதில் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்