புதுமாப்பிள்ளை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
கழுகுமலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுமாப்பிள்ளை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுமாப்பிள்ளை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
பாலியல் தொல்லை
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்தவர் அருளையா. இவருடைய மகன் முகேஷ் (வயது 25). கொத்தனாரான இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் முகேஷ், ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவியை கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
வலைவீச்சு
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முகேஷை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பள்ளி மாணவிக்கு புதுமாப்பிள்ளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---------------