சொத்து பிரச்சினையில்தம்பதி மீது தாக்குதல்

தேனி அருகே சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-07-13 18:45 GMT

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கீதா என்பவரை 2-வது திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு தீபக் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் தீபக் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதில், தீபக் மற்றும் சிலர் ராஜாங்கம், கீதா ஆகிய 2 பேரையும் தாக்கினர். இதுகுறித்து கீதா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தீபக், அவருடைய மனைவி சோபியா உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்