ஏரலில்மது விற்ற வாலிபர் கைது
ஏரலில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல்:
ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ஜெயசேகர் மற்றும் போலீசார் ஏரலில் இருந்து வாழவல்லான் செல்லும் ரோட்டில் நேற்று ரோந்து செல்லும் பொழுது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவர் போலீசை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார்.போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டை சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (வயது 39) என தெரியவந்தது. அவரிடம் இருந்த சாக்கு பையில் 414 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.