போடிமெட்டு மலைப்பாதையில்தீப்பற்றி எரிந்த கார்:3 பேர் உயிர் தப்பினர்

போடிமெட்டு மலைப்பாதையில் கார் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் உயிர் தப்பினர்.

Update: 2023-09-09 18:45 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 40). இவரது தம்பி சுரேஷ் (35). தாயார் ராமலட்சுமி. இவர்களது உறவினர் ஒருவருக்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை இவர்கள் 3 பேரும் விருதுநகரில் இருந்து காரில் சூரியநல்லிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை பாபு ஓட்டி சென்றார். போடிமெட்டு மலைப்பாதையில் 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் சென்றது.

அப்போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதைக்கண்டதும் அவர்கள் உடனே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினர். ஆனால் அதற்குள் காரில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அவர்கள் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து எலும்புகூடு போல் ஆனது. இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்