பர்கூர் மலைப்பாதையில் கலவை கலக்கும் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததுடிரைவர் காயம்
பர்கூர் மலைப்பாதையில் கலவை கலக்கும் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்தது ,இந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தாா்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் இருந்து தாமரைக்கரைக்கு கலவை கலக்கும் எந்திரத்தை இழுத்து கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகனத்தை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 35) என்பவர் ஓட்டினார். ஆலமரத்துமுக்கு பகுதியில் சென்றபோது டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார்.
ஆனால் பிரேக் பிடிக்காமல் சாலையோரமுள்ள 5 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி வாகன டிரைவர் காயம் அடைந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கலவை கலக்கும் எந்திர வாகனத்தில் சிக்கியிருந்த டிரைவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கிரேன் மூலம் வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதால், டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.