மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் வரும் 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;
சென்னை,
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு தரப்பினர் இழுத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் வரும் 23ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.