குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

தேனியில், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-03 18:45 GMT

தேனி மாவட்ட சமூக நலத்துறை சார்பில், உலக சைக்கிள் தினத்தையொட்டி 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டத்தின் கீழ், குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கருவேல்நாயக்கன்பட்டி, குன்னூர் வழியாக சுங்கச்சாவடி வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி தலைமையில் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று சைக்கிளில் பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், துணை கலெக்டர் (பயிற்சி) முகமது பைசல், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து தேனி புதிய பஸ் நிலைய பூங்கா பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்