எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2022-07-21 13:22 GMT

சென்னை,

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் தடைவிதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என பிரதான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16க்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால மனு ஆகஸ்ட் 16ம் தேதியும், பிரதான மனு செப்டம்பர் 1ம் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்