திருச்செந்தூர் நகராட்சி சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் உலக கடல் சார் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கி, கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து அனைவரும் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்லபாண்டியன், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்