தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில்கோவில்களில் உழவாரப் பணி
தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவாரப் பணி நடந்தது.
மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடியில் கோவில்களில் உழவாரப்பணி நடந்தது. உச்சினி மாகாளியம்மன் கோவிலில் மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் உழவாரப்பணி நடந்தது. இதில் ஆதிநாத ஆழ்வார், பா.ஜனதா ஆன்மிகப் பிரிவு முருகானந்தம், இந்து முன்னணி எஸ்.ஆர்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோவிலை சுத்தம் செய்தனர். இதனை தொடர்ந்து தீ்ர்த்தக்கரை சங்குமுக விநாயகர் கோவில், கைவல்ய சாமி மடம், இசக்கியம்மன் பெரும்படை சாஸ்தா கோவில், ஓட்டப்பிடாரம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் உழவாரப்பணிகள் நடந்தது.