கால்நடைத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

கம்பம் அருகே கால்நடைத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-12-23 18:45 GMT

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் முருகலட்சுமி தலைமை தாங்கினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கால்நடை டாக்டர் காமேஷ்கண்ணன் வெறிநோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினார். இதில் கால்நடை டாக்டர் செல்வம் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்