வியாபாரிகள் சங்கம் சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா

பாளையங்கோட்டையில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-06 23:19 GMT

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் பாளையங்கோட்டையில் வ.உ.சி. பிறந்தநாள் விழா மற்றும் சுதேசி வர்த்தக கண்காட்சி, கைவினைப்பொருட்கள் விற்பனை தொடக்க விழா ஆகியவை நடந்தது. விழாவுக்கு சங்க பேரவை தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.

வ.உ.சி. புகழுக்கு பெரிதும் துணை நிற்பது சுதேசி உணர்வா? சுதந்திர உணர்வா? என்ற தலைப்பில் சுதேசிப்பட்டிமன்றம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரை நடுவராக கொண்டு நடந்தது. வ.உ.சி.யின் பேத்தி சீதையம்மாள், கொள்ளு பேத்தி மரகதவல்லி பழனியப்பன், பேரன் சுந்தரலிங்கம், பாரதியார் தங்கையின் கொள்ளுப்பேத்தி உமாபாரதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், வக்கீல்கள் மகேந்திரன், காமராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவந்தி மகாராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்