ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது
ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது.;
சென்னை,
தனது ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 20-ந்தேதி சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நடக்க இருக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், மாவட்டச்செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.