இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் முன்பு தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். நகர இந்து முன்னணி தலைவர் ஜெகன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்