தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில்அம்மன் சப்பரங்கள் பேரணி

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் அம்மன் சப்பரங்கள் பேரணி வியாழக்கிழமை நடந்தது.

Update: 2023-10-26 18:45 GMT

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் அம்மன் சப்பரங்கள் பேரணி நேற்று நடந்தது.

சப்பர பேரணி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் 41-வது ஆண்டு அனைத்து சப்பர பேரணி நேற்று மாலை நடந்தது. இந்த பேரணி தூத்துக்குடி கீழுர் சக்தி விநாயகர் ஆலயம் முன்பு இருந்து தொடங்கியது. பேரணியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் தொடங்கி வைத்தார். பேரணியில் பாரத மாதாவும், அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன. இந்த பேரணி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. அங்கு அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மாயகூத்தன், தலைவர் தனபாலன், அமைப்பாளர் சிவக்குமார், துணைத்தலைவர் வன்னியராஜ், செயலாளர் ஆதிநாத ஆழ்வார், பொருளாளர் இசக்கிமுத்துகுமார், துணை பொருளாளர் பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்