பாரதிய ஜனதா கட்சி சார்பில்தெருமுனை பிரசார கூட்டம்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ஏரல்:
ஏரல் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஏரல் காந்தி சிலை அருகில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. அமைப்பு சாரா பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் முத்துமாலை முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ் சாதனைகளை பேசினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.