கழுகுமலையில் சேவாபாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கழுகுமலையில் சேவாபாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;
கழுகுமலை:
கழுகுமலை நடு்த்தெருவில் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அமைப்பு செயலாளர் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணரின் உருவ படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் மாணவ, மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.