மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நவீன படுக்கை
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நவீன படுக்கை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய மக்கள் நீதி மய்யம் இணைந்து மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான அவசர கால சிகிச்சைக்கு காற்றடைக்கும் வசதியுடன் கூடிய நோயாளிகளின் படுக்கை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் யோகேஷ் தலைமை தாங்கி, மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மேக்லின் கனிஷ்டாவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சுடலை, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.