பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில்சினைப்பை நீர்கட்டிகள் விழிப்புணர்வு தினம்
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் சினைப்பை நீர்கட்டிகள் விழிப்புணர்வு தினம் நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம் மற்றும் மகப்பேறு செவிலியர் துறையும் இணைந்து கல்லூரி முதல்வர் என்.கலைக்குருசெல்வி வழிகாட்டுதலின் படி திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு மேல்நிலைப் பள்ளியில், சினைப்பை நீர்கட்டிகள் குறித்த விழிப்புணர்வு தினத்தை நடத்தின. கல்லூரி மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளர் இணை பேராசிரியர் சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக செந்தில்முருகன் அரசு மேல்நிலைப் பள்ளி கங்கா கவுரி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை விமலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகளான ஆஸ்மி, முத்துமாரி, மகாலெட்சுமி ஆகியோர் சினைப்பை பற்றியும், அதன் காரணங்கள், அறிகுறிகள், கண்டறியும் முறை, சிகிச்சை முறை மற்றும் தடுக்கும் முறை பற்றியும் விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைத்தனர். பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் கலந்துரையாடலில் மாணவிகளின் கேள்விகளுக்கு விள்கம் அளிக்கப்பட்டது. கல்லூரி 4-ம் ஆண்டு மாணவி முத்துமாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.