தோட்டக்கலைத் துறை சார்பில் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகம்: துணை இயக்குனர் தகவல்

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகம் செய்யப்படும் என துணை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2022-10-30 18:45 GMT

தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23-ம் நிதி ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தை செயல்படுத்த ரூ.75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனை விதைகள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சம் 50 பனை விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், நிலத்தடி நீரை அதிகரித்து மண் அரிப்பை தடுத்து, அடி முதல் நுனி வரை பயனளிக்கும் மரமாகவும் விளங்கும் பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீதாலட்சுமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்