பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம்: 23-ந்தேதி நடக்கிறது

பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி வழங்கும் முகாம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என தேனி கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2022-11-11 18:45 GMT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற கடனுதவி வழங்கும் முகாம் வருகிற 23-ந்தேதி காலை 11 மணியளவில் தேனியில் உள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இதில், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் சாதி சான்று, வருமான சான்று, பிறப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், ஓட்டுனர் உரிமம், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்