டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்றம் சார்பில்ஏழைகளுக்கு உணவு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்றம் சார்பில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி வேலாயுதபுரம் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற நகர தலைவர் முருகன் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர் ஜோஸ்பின் லூர்துமேரி மாைல அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். 5-வது வார்டு தி.மு.க. அவைத்தலைவர் நாகராஜன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். நற்பணிமன்ற நிர்வாகி கண்ணன், ஆத்தியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.