ஆசனூர் சாலையில் உலா வந்த காட்டு யானை

ஆசனூர் சாலையில் காட்டு யானை உலா வந்தது.

Update: 2023-07-29 21:53 GMT

தாளவாடி

தாளவாடி மலைக்கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் கலெக்டர் மனீஷ், நேற்று முன்தினம் வந்தார். ஆய்வு பணிகளை முடித்து கொண்டு மீண்டும் ஈரோட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வந்தபோது காட்டு யானை ஒன்று அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்து உள்ளது. இதை கண்டதும் அவர் காரில் இருந்தபடி தன்னுடைய செல்போன் மூலம் ரோட்டில் உலா வந்த காட்டு யானையை படம் எடுத்தார். பின்னர் அவர் அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்