மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
கூடலூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.;
கூடலூர் கருணாநிதி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). கூலித் தொழிலாளி. நேற்று இவர், வேலைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் கூடலூருக்கு சென்று கொண்டிருந்தார். கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மந்தை வாய்க்கால் பாலம் அருகே வந்தபோது திருச்செந்தூரில் இருந்து குமுளி நோக்கி வந்த அரசு பஸ் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.