மோட்டார் சைக்கிள் மீதுலோடு ஆட்டோ மோதல்: வக்கீல் சாவு

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ ேமாதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக பலியானார்.

Update: 2023-01-16 18:45 GMT

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ ேமாதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக பலியானார்.

வக்கீல்

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் பார்வதி நாதன் (வயது25). வக்கீல். இவர் தூத்துக்குடியில் உள்ள வக்கீல் சின்னத்துரை என்பவரிடம் ஜூனியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் அத்திமரப்பட்டி ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.

விபத்தில் சாவு

அப்போது எதிரே வந்த மினி லோடு ஆட்டோ, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்