ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-09-16 21:01 GMT

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் உதயகுமார் (வயது 23). இவர் சேலத்தில் ஒரு பிரபல துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்து வந்த சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகள் தேவதர்ஷினி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் 2 பேரின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு உதயகுமாருடன் தேவதர்ஷினியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்