பர்கூர் அருகே ஓம் சக்தி கோவில் கும்பாபிஷேக விழா

Update: 2023-06-27 19:45 GMT

பர்கூர்

பர்கூர் அருகே உள்ள குண்டலக்குட்டை கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கும்பாபிேஷகம் கடந்த 23-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம், சக்தி அழைத்தல், புற்றுமண் எடுத்தல், வாஸ்து சாந்தி ஆகிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புதிய விக்ரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், முதல் காலயாக பூஜை, அம்மனுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்