இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்
இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்
வேதாரண்யம் கடற்கரையில் ஆலிவர் ெரட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
ஆமை முட்ைடகள்
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும். இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள்.
அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக்குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வரும்.
கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது.
ஆலிவர் ரெட்லி ஆமைகள்
தற்போது புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும், வெளியேயும் சேறு நிறைந்துள்ளது. இந்த கடற்கரை பகுதிக்கு முட்டையிட வரும் அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி அவ்வப்போது இறந்து கரை ஒதுங்குகிறது.
நேற்று மாலையில் வேதாரண்யம் கடற்கரையில் 3 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் புதைத்தனர்.