திருட்டை தடுக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

Update: 2022-11-30 17:37 GMT


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவுடன் கட்டப்பட்ட திருப்பூர் பழைய பஸ் நிலையம் கடந்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்த பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள அலங்கார வளைவில் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பஸ் நிலையம்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தது.

இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று சமூக சேவகர் மூலம் திருட்டு குறித்து ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 'முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம், பணம், ெபாருள் பத்திரம்' என தொடர்ச்சியாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டு பயணிகள் உஷார்படுத்தப்பட்டு வருகின்றனர். இது திருட்டை தடுக்க சற்று உதவும் என்றாலும், இங்கு போலீசார் இடைவிடாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பா

மேலும் செய்திகள்