தக்கலை:
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 51). இவருடைய தாயார் ஸ்ரீதேவி (72). நேற்றுமுன்தினம் காலையில் ஸ்ரீதேவி வீட்டில் இருந்த போது ரப்பர் ஷீட் உறைய வைப்பதற்கு பயன்படுத்தும் திராவகத்தை எடுத்து திடீரென குடித்துள்ளார்.
இதனை கவனித்த மகன் கிருஷ்ணகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதேவி தவறுதலாக திராவகத்தை எடுத்து குடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.