வாகனம் மோதி மூதாட்டி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.;

Update: 2022-10-07 18:45 GMT

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அடுத்த கோனாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் உடையம்மை (வயது 80). சம்பவத்தன்று இவர் நாட்டரசன் கோட்டை மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உடையம்மை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்