தூத்துக்குடியில்ரெயில் மோதி மூதாட்டி பலி
தூத்துக்குடியில்ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.
தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மனைவி சாமியம்மாள் (வயது 70). இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் இருந்து சின்னக்கண்ணு புரத்தில் உள்ள டீக்கடைக்கு சென்றாராம். அப்போது அவர், அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அங்கு வந்த ரெயில் சாமியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாமியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.